மழைக்காட்டின் கதைகள் : நவீன இந்தோனேசிய நாவல்கள்

இந்தோனேசியாவுக்கென்று ஒரு தனிப்பட்ட கதை சொல்லும் பாணி இன்றுவரை இருக்கிறது. கிறிஸ்துக்குப் பிறகான இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஜாவா சுமாத்ரா தீவுகளுக்கு வந்திறங்கிய இந்து வணிகர்களும் புத்தப் பிக்குகளும் வாய் மொழியாக ராமாயண, மகாபாரத, புத்த ஜாதகக் கதைகளை இந்தோனேசியாவிற்குக் கொண்டு வந்தார்கள். இந்த மாபெரும் கதைகளின் சாயலில் உருவாகி வளர்ந்த இந்தோனேசியக் கதைகள் மிக விஸ்தாரமாகப் பெருகிப் பலப்பல கிளைக்கதைகளாகப் பிரியும் … Continue reading மழைக்காட்டின் கதைகள் : நவீன இந்தோனேசிய நாவல்கள்

சிங்கப்பூர் இலக்கியம் – பெயரில்லாத புலம்பல்

ஜெயமோகனின் வலைதளத்தில் சிங்கப்பூர் இலக்கியத்தைக் குறித்து வேறொரு கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது.  நித்தம் நித்தம் புத்தம் புதிய ஆச்சரியங்களைத் தருவது ஜெயமோகனின் வலைதளம். இந்தக் கடிதத்தத்தின் ஆசிரியர் “எம்” தன்னுடைய பெயரைக் கொடுக்க மறுத்துள்ளார். அவர் ‘போலீஸ்புகாருக்குப் பயப்படும் சாமானியச் சிங்கப்பூர்க்காரராம்’. அதனால்தான் ஜெயமோகனே அந்தக் கடிதத்துக்கு ‘பெயரிலி’ என்ற தலைப்புக் கொடுத்திருக்கிறார் போலும். (https://m.jeyamohan.in/125310#.XV3jwVNX4wA) கடிதம் எழுதியவர் முதலில் சிங்கப்பூரில் தமிழில் எழுதுபவர்களை … Continue reading சிங்கப்பூர் இலக்கியம் – பெயரில்லாத புலம்பல்

நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்

செவ்விலக்கியங்களை – குறிப்பாக செவ்விலக்கியக்கங்களாகக் கருதப்படும் நாவல்களை – வாசிப்பதற்குக் கடுமையான மனப்பயிற்சி அவசியம் என்று நான் எழுதியிருந்ததை அட்சேபித்து நண்பர்கள் சில பேர் எனக்கு எழுதியிருந்தார்கள். இது நான் எதிர்ப்பார்த்ததுதான். இலக்கிய வாசகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் நாவல் வாசிப்பில் எவ்வித முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாதவர்கள். ஒன்றோ, மூன்றோ, இருபதோ, ஐம்பதோ சிறுகதைகளைப் படித்துவிட்டுத் தீவிர நாவல்களுக்கு … Continue reading நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்

நல்ல வாசிப்பு என்பது என்ன? – விளாடிமிர் நபோகோவ்

இலக்கியத்தைப் பற்றிய தனது விரிவுரைகளின் தொகுப்பொன்றில் விளாடிமிர் நபோகோவ் செவ்விலக்கியங்களின் தரமான வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். செவ்விலக்கியங்களை வாசிக்கத் தொடங்குபவர்கள் செய்ய வேண்டிய தலையாயக் காரியம்: அந்தந்த நாவலுக்குள் எழுத்தாளன் கவனமாய் அமைத்திருக்கும் மிக நுணுக்கமான விவரங்களை மிகக் கவனமாகப் படித்து அவற்றை ஆராய்வதுதான். ஒரு செவ்விலக்கிய நாவலில் உள்ள விவரங்களின் வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் … Continue reading நல்ல வாசிப்பு என்பது என்ன? – விளாடிமிர் நபோகோவ்