யாசுனாரி காவாபாட்டா – தோல்வியின் பெரும் வலி

போரில் வெற்றிப் பெறத் தூர நோக்குப் பார்வையும் சரியான திட்டமிடலும் அவசியம். பண்டைய சீன அறிஞர் சூன் சூ எழுதிய “போர்க்கலை” என்ற நூலில் ‘சரியான திட்டமிடல் பாதி வெற்றி’ என்று எழுதியிருக்கிறார்.  திருக்குறளில் தெரிந்து செயல்வகை, காலமறிதல், இடனறிதல், அமைச்சு போன்ற அதிகாரங்கள் தூர நோக்கை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடுதலைப் பற்றிப் பேசுகின்றன. கீழை நாடுகளின் விளையாட்டுக்களில் பல போர்த் தந்திரங்களையும் … Continue reading யாசுனாரி காவாபாட்டா – தோல்வியின் பெரும் வலி

சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் “சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்” என்ற பெயரில் புத்தகங்கள் தொகுப்புக்களாகக் கறுப்பு நிற அட்டைகளோடு வெளிவந்தன. ‘சிங்கப்பூர் பேய்க் கதைகள் 1’ என்று தொடங்கிக் கிட்டத்தட்ட இருபதுக்கும் அதிகமான பல தொகுப்புக்கள். அவற்றை ‘ரஸ்ஸல் லீ’ என்ற பெயரில் ஒருவர் எழுதியிருந்தார். எட்கர் ஆலன் போ,ஹெச். பி. லவ்கிராஃப்ட், ஸ்டீபன் கிங் போன்ற புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களின் பேய்க்கதைகளோடு ஒப்பிடுகையில் … Continue reading சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்

ஈவான் கோன்சாரோவ் – சோம்பல் என்னும் பெருநிலை

எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று கனலி குழுவினோரோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பல வாத்தியங்களின் இசையை ஒரே இசையாய் ஒருங்கிணைக்கும் ஐரோப்பிய சிம்பொனி இசைபோல் பல கதாபாத்திரங்களின் கதைகளை ஒருங்கிணைக்கும் பன்முகத் தன்மை கொண்ட ஐரோப்பிய நாவல் வடிவத்தோடு டால்ஸ்டாய் தஸ்தவியஸ்கி ஆகியோரது நாவல்கள் மனித எதிர்நோக்கும் பெரும் பிரச்சனை குறித்த உரையாடல்களையும் சேர்த்துக் கொடுத்ததாகச் சொன்னார். அந்த நூற்றாண்டின் ரஷ்ய நாவல்களின் … Continue reading ஈவான் கோன்சாரோவ் – சோம்பல் என்னும் பெருநிலை

டோரிஸ் லெஸ்ஸிங் – பெண்ணியமும் மற்ற குழப்பங்களும்

பெண்ணிய நாவல் என்ற ஒன்று உருவாவதற்கு மிகப் பெரும் தடையாக இன்றுவரை இருந்து வருவது அப்படிப்பட்ட நாவல்களில் சேர்க்கப்படும் ஆண் கதாபாத்திரங்கள்தான் என்பது என் கருத்து. ”பெண்ணிய ஆதிக்கிழவி’ என்று அழைக்கப்படக் கூடிய கேர்ட்ரூட் ஸ்டைன் தொடங்கி சீமோன் பூவார் வழியாக வந்துள்ள பெரும்பாலான பெண்ணிய இலக்கியங்கள் என்பவை ஆண்கள் தம்மை நிலை நிறுத்தக் கட்டமைத்திருக்கும் அதிகார மையங்களுக்கு மாற்றாக பெண்கள் என்னவெல்லாம் … Continue reading டோரிஸ் லெஸ்ஸிங் – பெண்ணியமும் மற்ற குழப்பங்களும்

சிங்கப்பூர் இலக்கியம்: அறிந்த இடங்களின் அறியாத ரகசியங்கள்

சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு.  மொத்தமே 720 சதுர கி.மீக்கள் பரப்பளவு கொண்ட தீவு. மூச்சைப் பிடித்து முயன்றால் அரை நாளுக்குள்ளாகவோ முக்கால் நாளுக்குள்ளாகவோ இதன் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு நடந்துபோய் விடலாம் என்ற வகையில் அமைந்திருப்பது. முக்கியச் சிங்கப்பூர்த் தீவைச் சுற்றி இந்நாட்டைச் சேர்ந்த சற்றுப் பெரியதும் சிறியதுமான 62 மற்ற தீவுகள் இருக்கின்றன. இவற்றில் செந்தோசா தீவைத் தவிர … Continue reading சிங்கப்பூர் இலக்கியம்: அறிந்த இடங்களின் அறியாத ரகசியங்கள்

ஃபிலிப் ரோத் – சொர்க்கத்தின் கறுப்புப் பகுதிகள்

எல்லாச் செல்வச் செழிப்புக்களும் உடைய ஒரு நாட்டில் அமர்ந்து கொண்டு தீவிர இலக்கியம் படைக்க முடியுமா என்ற உரையாடல் அண்மையில் எழுவதுபோல் எழுந்து அடங்கிப் போனது. ஃபிலிப் ரோத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் 1997ல் வெளிவந்த An American Pastoral என்ற நாவல் இந்த உரையாடலுக்குப் பயனுள்ளதாக அமையும். அமெரிக்காவில் 1940களின் இறுதியில் கல்லூரி மாணவனான யூத இளையன் ஒருவனைப் பற்றியக் கதை. … Continue reading ஃபிலிப் ரோத் – சொர்க்கத்தின் கறுப்புப் பகுதிகள்

டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

இலக்கியத்தின் மாபெரும் பணிகளில் ஒன்று மனித சமுதாயம் மறக்கக் கூடாத துயரச் சம்பவங்களை காலத்துக்கும் மனிதர்களுடைய கூட்டு மனதில் அழியாத நினைவாகத் தேக்கி வைப்பது,இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவே மிஞ்சி இருப்பவர்கள் ஆற்றும் கடமையாகவும் அஞ்சலியாகவுமே கருதப்படுகிறது. இந்தப் பார்வையின்படி சாமானிய இலக்கியத்துக்கும் தலைசிறந்த இலக்கியத்துக்கும் உள்ள மிக முக்கியமான வேற்றுமைகளில் இந்த நினைவுகூர்தல் ஒன்றாகிறது, சாமானியப் படைப்புக்கள் இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், … Continue reading டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

காஃப்கா: நாதியற்றவர்களின் கதைகள்

1750 தொடங்கி 1850வரை இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்த தொழில்புரட்சி ஐரோப்பியக் கண்டத்தின் பழைய பொருளாதாரக் கட்டமைப்பையும் சமுதாய உறவுகளையும் மீறி ஐரோப்பிய ஆன்மாவிலும் ஆன்மீக வாழ்விலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பல அறிவியல் துறைகளில் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாகப் புறப்பட்டு வந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (இன்றுள்ள கணினித் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்களைப் போலவே) … Continue reading காஃப்கா: நாதியற்றவர்களின் கதைகள்

யூகோ சூசிமா: தண்ணீரில் கண்டம்

ஜப்பானுக்கும் தண்ணீருக்கும் இடையே ஓர் அலாதியான உறவு உண்டு. ஜப்பான் தீவுகளைச் சுற்றி இருக்கும் கடல் அந்நிய படையெடுப்புகளிலிலிருந்து – குறிப்பாகச் சீனப் படையெடுப்புகளிலிருந்து – ஜப்பானைக் காக்கும் இயற்கை அரணாக அமைந்தது. அதே சமயம் கடலே ஜப்பானையும் ஜப்பானியரையும் உலக வரைப்படத்திலிருக்கும் ஏனைய நாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்தியது. 1853-இல் அமெரிக்க கடற்படை தளபதி மத்யூ பெர்ரியின் கறுப்புக் கப்பல்கள்” ஜப்பானைச் சென்றடைந்து அதன் … Continue reading யூகோ சூசிமா: தண்ணீரில் கண்டம்

எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்

மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும்விட கவிதைகள் தோற்றுப் போவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. கவிதையை வசீகரமாக்கும் அத்தனைக் கூறுகளுமே எளிதில் அதன் பலவீனங்களாகவும் மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம். பொதுவாக கவிதை மற்ற உரைநடை வடிவங்களைவிட (வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்) நீளத்தில் குறைந்ததாக இருக்கும். கருத்தைக் கவர்வதற்கான உவமை, உருவகம், உயர்வு நவிற்சி போன்ற உத்திகளும் (நவீனக் கவிதை என்றாலும்கூட ஒரு … Continue reading எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்