Category: Uncategorized

மோசமான கவிதை மொழிபெயர்ப்புக்கள்

சொல்லவே சங்கடமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் பல்வேறு இடங்களிலிருந்து வெளிவந்திருக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நான்கு கவிதைத் தொகுப்புக்களை வாசிக்க நேர்ந்தது. தமிழ்க் கவிதைகளின் தரம் மற்ற மொழியினருக்குத் தெரியட்டுமே என்ற எண்ணத்தில் வெளியிட்டிருப்பார்கள். எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பவர்கள் ஒரு மொழியிலோ இரு மொழிகளிலேயும் மெத்தப் படித்தவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் இரு மொழிகளின் சமகால இலக்கியப் போக்குகளைக் கொஞ்சமாவது அறிந்த … Continue reading மோசமான கவிதை மொழிபெயர்ப்புக்கள்

வில்லியம் ஃபோல்க்னர்: அமெரிக்க தஸ்தவ்யெஸ்கி

அவரவர் செய்த குற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எகிர்கொள்ளும் மனிதர்களுக்குள் எழும் உளவியல் மாற்றங்களையும் அவற்றின் பலனாக அவர்களின் வாழ்க்கையிலும் உறவுகளிலும் ஏற்படக்கூடிய சவால்களையும் புனைவில் முதன்முதலாக மிகத் துல்லியமாக விவரித்தவர் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதோர் தஸ்தவ்யெஸ்கி. அவருடைய நாவல்களில் விவரிக்கப்படும் குற்றங்கள் தனி மனித விருப்பு வெறுப்புக்களிலிருந்து எழுவதாக தஸ்தவ்யெஸ்கி காட்டினாலும்கூட அக்குற்றங்களின் கனத்தையும் விளைவுகளையும் பழுதுபட்ட அரசியல், ஆன்மீக, பொருளாதார மற்றும் … Continue reading வில்லியம் ஃபோல்க்னர்: அமெரிக்க தஸ்தவ்யெஸ்கி

தீவிர வாசிப்பு என்றால் என்ன?

எல்லா வாசிப்பு, எழுத்து மற்றும் ஜோதிடம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளிலும் வேத வாக்காக வழங்கப்படும் அறிவுரை அந்தந்தத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நிறைய அல்லது தீவிரமாக வாசிக்க வேண்டும் என்பது. எண்ணிக்கையே தீவிரம் என்று மிகப் பரவலாகக் கருதப்படுவதால் இந்த அறிவுரையைக் கேட்பவர்கள் அந்தத் தருணத்தில் பேனாக்களை மேசைமேல் வைத்துவிட்டு அறிவுரை வழங்குபவரை லட்சிய உணர்வோடு வெறித்துப் பார்ப்பார்கள். ஆனால் … Continue reading தீவிர வாசிப்பு என்றால் என்ன?

டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

இலக்கியத்தின் மாபெரும் பணிகளில் ஒன்று மனித சமுதாயம் மறக்கக் கூடாத துயரச் சம்பவங்களை காலத்துக்கும் மனிதர்களுடைய கூட்டு மனதில் அழியாத நினைவாகத் தேக்கி வைப்பது,இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவே மிஞ்சி இருப்பவர்கள் ஆற்றும் கடமையாகவும் அஞ்சலியாகவுமே கருதப்படுகிறது. இந்தப் பார்வையின்படி சாமானிய இலக்கியத்துக்கும் தலைசிறந்த இலக்கியத்துக்கும் உள்ள மிக முக்கியமான வேற்றுமைகளில் இந்த நினைவுகூர்தல் ஒன்றாகிறது, சாமானியப் படைப்புக்கள் இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், … Continue reading டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்

மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும்விட கவிதைகள் தோற்றுப் போவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. கவிதையை வசீகரமாக்கும் அத்தனைக் கூறுகளுமே எளிதில் அதன் பலவீனங்களாகவும் மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம். பொதுவாக கவிதை மற்ற உரைநடை வடிவங்களைவிட (வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்) நீளத்தில் குறைந்ததாக இருக்கும். கருத்தைக் கவர்வதற்கான உவமை, உருவகம், உயர்வு நவிற்சி போன்ற உத்திகளும் (நவீனக் கவிதை என்றாலும்கூட ஒரு … Continue reading எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்

சிங்கப்பூர் இலக்கியம் – பெயரில்லாத புலம்பல்

ஜெயமோகனின் வலைதளத்தில் சிங்கப்பூர் இலக்கியத்தைக் குறித்து வேறொரு கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது.  நித்தம் நித்தம் புத்தம் புதிய ஆச்சரியங்களைத் தருவது ஜெயமோகனின் வலைதளம். இந்தக் கடிதத்தத்தின் ஆசிரியர் “எம்” தன்னுடைய பெயரைக் கொடுக்க மறுத்துள்ளார். அவர் ‘போலீஸ்புகாருக்குப் பயப்படும் சாமானியச் சிங்கப்பூர்க்காரராம்’. அதனால்தான் ஜெயமோகனே அந்தக் கடிதத்துக்கு ‘பெயரிலி’ என்ற தலைப்புக் கொடுத்திருக்கிறார் போலும். (https://m.jeyamohan.in/125310#.XV3jwVNX4wA) கடிதம் எழுதியவர் முதலில் சிங்கப்பூரில் தமிழில் எழுதுபவர்களை … Continue reading சிங்கப்பூர் இலக்கியம் – பெயரில்லாத புலம்பல்

நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்

செவ்விலக்கியங்களை – குறிப்பாக செவ்விலக்கியக்கங்களாகக் கருதப்படும் நாவல்களை – வாசிப்பதற்குக் கடுமையான மனப்பயிற்சி அவசியம் என்று நான் எழுதியிருந்ததை அட்சேபித்து நண்பர்கள் சில பேர் எனக்கு எழுதியிருந்தார்கள். இது நான் எதிர்ப்பார்த்ததுதான். இலக்கிய வாசகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் நாவல் வாசிப்பில் எவ்வித முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாதவர்கள். ஒன்றோ, மூன்றோ, இருபதோ, ஐம்பதோ சிறுகதைகளைப் படித்துவிட்டுத் தீவிர நாவல்களுக்கு … Continue reading நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்