Category: கட்டுரைகள்

எதிர் நூலகம் – யாரும் வாசிக்காத நூல்களைச் சேகரித்தல்

பல வருடங்களுக்கு முன்னால் என் வீட்டில் இருக்கும்  நூல்களைப் பார்த்த போது எனக்கு ஓர் உண்மை விளங்க ஆரம்பித்தது. என்னிடமிருந்த நூல்களில் பல நூல்கள் மற்றவர்களின் பரிந்துரையில் நான் வாசித்தது. யாரேனும் நலன்விரும்பி நான் எழுத்துத் துறையில் போதிய பாதுகாப்புகளைச் செய்து கொள்ளாமல் காலடி எடுத்து வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு ‘இந்திந்த நூல்களை நிச்சயம் வாசியுங்கள்’ என்பார். இந்த நூல்களை வாசிப்பது எழுத்துத் … Continue reading எதிர் நூலகம் – யாரும் வாசிக்காத நூல்களைச் சேகரித்தல்

ரோமான்ஸ் – வெகுஜன இலக்கியம்

நாலாந்தர இலக்கியத்தைப் பற்றி விவாதம் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் ஆங்கிலம் முதலான மேற்கத்திய மொழிகளில் வருடா வருடம் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்து நிறைய விற்கும் ரோமான்ஸ் நாவல்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது. அடையவே முடியாத என்று எல்லோரும் கருதும் அழகான இளம் பெண்ணும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுக்கும் மிகக் கட்டுமஸ்தான ஆணும் காதல் வயப்படுவதையும், அந்தக் காதலால் விளையும் … Continue reading ரோமான்ஸ் – வெகுஜன இலக்கியம்

அஹமெத் சதாவி – சிதைந்த சொர்க்கம்

போர் என்பது அடிப்படையில் மாபெரும் சிதைவு. போரால் நாடுகள் நகரங்கள் மட்டுமன்றி மனித உறவுகளும், குடும்பங்களும் சிதைகின்றன. ஆனால் இத்தனைச் சிதைவுகளின் மிக நேரடியான வெளிப்பாடாகவும் குறியீடாகவும் போர் மனித உடல்களைச் சிதைக்கிறது. நவீனப் போர்முறைகள் மனித உடல்களை பல விதமாகச் சிதைக்கக் கூடிய தொழில்நுட்பச் சாத்தியங்களை உடையவை. பல்லாயிரம் மனிதர்களின் ஒரே நேரத்தில் சிதைக்கக் கூடிய பீரங்கிகள், டாங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் … Continue reading அஹமெத் சதாவி – சிதைந்த சொர்க்கம்

விசாரணை: எது அழகு?

என்னதான் எழுதிக் கொண்டு இருந்தாலும் எனக்குத் தத்துவப் பாடத்தின்மீது தீராத மயக்கம் உண்டு. நான்காண்டுகள் உடல், பொருள், ஆவி எல்லாம் அர்ப்பணித்து அரசியலோடு தத்துவத்தையும் பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் எழுதிச் சமர்ப்பித்தேன் என்பதற்காக அல்ல (தத்துவ வகுப்பில் பெண்கள் என்ன காரணத்தினாலோ அதிகம்). அடிப்படையில் எனக்குக் கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோவின் தத்துவ விசாரணைகளின்மீதும் முடிவுகளின்மீதும் நல்ல ஈர்ப்பு உண்டு. … Continue reading விசாரணை: எது அழகு?

வில்லியம் கோல்டிங் – மானுடர்களின் ஆதிகாயம்

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது மிக நெடுங்காலமாய் இலக்கியப் புனைவுகளின் விசாரணையாக இருந்து வந்திருக்கிறது. கிறிஸ்துவ இறையியல்படி மனிதர்கள் பிறவியிலேயே பாவத்தில் பிறந்திருப்பதாகவும், இந்த ஆதிபாவமானது அவர்களைத் தீமைச் செய்யத் தூண்டுவதாகவும் கருதப்படுகிறது லத்தீன் கிறிஸ்துவத்தில் இந்த ஆதி பாவம் சட்ட நியதிகளின்படி ஆராயப்பட்டு மனிதன் இறைவனின் இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாதவரை நரக வேதனைகளுக்கு உரிய குற்றவாளியாகக் கருதப்படுகிறான். ரஷ்யா, கிரேக்கம் … Continue reading வில்லியம் கோல்டிங் – மானுடர்களின் ஆதிகாயம்

யாசுனாரி காவாபாட்டா – தோல்வியின் பெரும் வலி

போரில் வெற்றிப் பெறத் தூர நோக்குப் பார்வையும் சரியான திட்டமிடலும் அவசியம். பண்டைய சீன அறிஞர் சூன் சூ எழுதிய “போர்க்கலை” என்ற நூலில் ‘சரியான திட்டமிடல் பாதி வெற்றி’ என்று எழுதியிருக்கிறார்.  திருக்குறளில் தெரிந்து செயல்வகை, காலமறிதல், இடனறிதல், அமைச்சு போன்ற அதிகாரங்கள் தூர நோக்கை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடுதலைப் பற்றிப் பேசுகின்றன. கீழை நாடுகளின் விளையாட்டுக்களில் பல போர்த் தந்திரங்களையும் … Continue reading யாசுனாரி காவாபாட்டா – தோல்வியின் பெரும் வலி

சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் “சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்” என்ற பெயரில் புத்தகங்கள் தொகுப்புக்களாகக் கறுப்பு நிற அட்டைகளோடு வெளிவந்தன. ‘சிங்கப்பூர் பேய்க் கதைகள் 1’ என்று தொடங்கிக் கிட்டத்தட்ட இருபதுக்கும் அதிகமான பல தொகுப்புக்கள். அவற்றை ‘ரஸ்ஸல் லீ’ என்ற பெயரில் ஒருவர் எழுதியிருந்தார். எட்கர் ஆலன் போ,ஹெச். பி. லவ்கிராஃப்ட், ஸ்டீபன் கிங் போன்ற புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களின் பேய்க்கதைகளோடு ஒப்பிடுகையில் … Continue reading சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்