தஸ்தவ்யஸ்கியை வாசித்தல் – நாவல்கள்

தஸ்தவ்யஸ்கியை வாசிப்பவர்கள் பெரும்பாலும் 1866ல் வெளிவந்த அவருடைய ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் தொடங்கி 1880ல் வெளிவந்த ‘கரமசோவ் சகோதரர்கள்’ வரையிலுள்ள 7 நாவல்களில்தான் பெரும்பாலும் கவனம் செலுத்துவார்கள்.

இந்த ஏழு நாவல்களிலும்கூட ‘குற்றமும் தண்டனையும்’, ‘சூதாடி’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ ஆகிய நான்கும்தான் வாசகர்களின் கவனத்தைப் பெறுகின்றன.

ஏனைய மூன்று நாவல்களான ‘நிரந்தர கணவன்’ (1869 – The Eternal Husband), ‘பிசாசுகள்’ (1872 – The Devils) மற்றும் ‘பதின்ம வயதினன்’ (1875 – The Adolescent) மேற்கூறிய நான்கு நாவல்கள் அளவுக்குக் கவனம் பெறுவதாகத் தோன்றவில்லை.

இப்படிப்பட்ட வாசிப்பு தவறல்ல. 1866க்குப் பிறகுதான் தஸ்தவ்யஸ்கியின் படைப்புக்கள் தனி வீச்சும் வீரியமும் பெறுகின்றன.

அடுத்து வரும் இரண்டு மாதங்களில் (பிப்ரவரி-மார்ச்) தஸ்தவ்யஸ்கியின் வாழ்க்கை வரலாற்றோடு மொத்த நாவல்களையும் வாசித்துக் கட்டுரைகளாகப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். தரமிருந்தால் இவை புத்தகமாக வெளிவரும்.

நான் வாசிக்கப் போகும் தஸ்தவ்யஸ்கியின் நாவல்களின் பட்டியலை நண்பர்களின் பார்வைக்காகப் பகிர்கிறேன்.

1866க்குப் பிறகு தஸ்தவ்யஸ்கியின் நாவல்களில் தென்படும் புதிய பரிணாமத்திற்குக் காரணங்கள் தேடுகிறவர்கள் 1863ல் வெளிவந்த அவருடைய பயணக் கட்டுரையான ‘கோடக்காலத்தில் பார்த்தவற்றின் பனிக்காலக் குறிப்புகள்’-ஐக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

1862ல் தஸ்தவ்யஸ்கி முதன்முறையாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பெர்லின், பாரிஸ், லண்டன், ஃப்ளோரன்ஸ், மிலான், வியன்னா என்று நீண்ட அவருடைய பயணத்தின்போது மேற்குலகின் விரும்பத்தகாத தாக்கங்களைப் பற்றித் தஸ்தவ்யஸ்கியின் மனதில் ஆழமான அபிப்பிராயங்கள் வேரூன்றின.

அதன் பயனாகப் பாரம்பரிய ரஷ்யப் பண்புகளையும் மதிப்பீடுகளையும் பயணத்துக்குப் பின்னான தனது நாவல்களில் புகுத்த ஆரம்பித்தார். ‘ஒரு எழுத்தாளனின் நாட்குதிப்பிலும்’ இதைப்பற்றித் தஸ்தவ்யஸ்கி குறிப்பிடுகிறார்.

இதைப்பற்றி மேலும் எழுதுவேன்.

இப்போதைக்குத் தஸ்தவ்யஸ்கியின் நாவல்களில் தேதிவாரியான பட்டியல்:

1846 ஏழைகள் (Poor Folk)
1846 இரட்டை (The Double – குறுநாவல்)
1847 The Landlady (குறுநாவல்)
1849 நெத்தோச்கா நெஸ்வானோவா (முடிவடையாத நாவல்)
1859 Uncle’s Dream
1859 ஸ்டெபான்சிகோவோ கிராமம் (The Village of Stepanchikovo)
1861 Humiliated and Insulted
1861 இறந்தவர்களின் வீடு (The Hoise of the Dead)
1864 பாதாளக் குறிப்புகள் (The House of the Dead, குறுநாவல்)
1866 குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)
1867 சூதாடி (The Gambler)
1869 அசடன் (The Idiot)
1869 நிரந்தர கணவன் (The Eternal Husband)
1872 பிசாசுகள் (The Devils)
1875 பதின்ம வயதினன் (The Adolescent)
1880 கரமசோவ் சகோதரர்கள் (Brothers Karamazov)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s