உம்பெர்ட்டோ எஃகோ – எழுத்தாளர்களுக்கு அறிவுரை

அறிவுரை சொல்வது எல்லோருக்கும் விருப்பமான விஷயம்.

பல எழுத்தாளர்கள் உண்மையில் முழுநேர அறிவுரை சொல்பவர்களாக இருக்கத்தான் விரும்புகிறார்கள் என்பது என் கணிப்பு. இவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இவர்கள் சில சாதாரணமான நூல்களை எழுதிவிட்டு முழு நேரமாக அறிவுரை சொல்லப் போய்விடுகிறார்கள்.

நல்ல எழுத்தாளர்கள் அறிவுரை சொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் மனச் சஞ்சலம் அடைகிறார்கள். இவர்களில் பலர் நல்ல அறிவுரைகளை எப்படிச் சொல்வது என்று புரியாமல் மோசமான அறிவுரைகளைச் சொல்கிறார்கள்.

மிச்சமிருக்கும் நல்ல எழுத்தாளர்கள் விஷமமாக எதையேனும் எழுதி வைத்துவிடுகிறார்கள். நாவலுக்கு இலக்கணம் எழுதிய E.M. Forsterஐ இந்த வரிசையில் சேர்க்கலாம்.

உம்பெர்ட்டோ எஃகோ நல்ல எழுத்தாளர். அவர் மோசமான அறிவுரைகளையும் விஷமமான அறிவுரைகளையும் எழுத்தாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

அவர் வழங்கிய முதல் அறிவுரை: நீளமான வாக்கியங்களை எழுத வேண்டாம்.

“நீ (பிரெஞ்சு எழுத்தாளர் மார்செல்) ப்ரூஸ்ட் அல்ல. நீளமான வாக்கியங்களை எழுதாதே. நீளமான வாக்கியம் தோன்றினால் எழுதி வைத்துக் கொள். பின்பு அதை உடைத்துவிடு.”

இரண்டாவது அறிவுரை: முழுமையான சின்ன வாக்கியங்களை எழுத வேண்டும்.

“நீ எழுத்தாளர் இ.இ. கம்மிங்க்ஸ் அல்ல. கம்மிங்க்ஸ் அமெரிக்க நவீனக் கவிஞர். இயல்பாகவே அவர் காற்புள்ளிகளையும், முற்றுப்புள்ளிகளையும் சிக்கனமாகவே பயன்படுத்தினார். தனது வரிகளைச் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நவீனக் கவிஞர் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் கம்மிங்க்ஸ் செய்தால். ஆனால் நீ கம்மிங்கக்ஸ் அல்ல. நவீனக் கவிஞனும் அல்ல. நீ நவீனக் கவதைகளைப் பற்றி நீ ஆய்வுக் கட்டுரை எழுதும்போதும்.”

மூன்றாவது அறிவுரை: உரைநடையில் கவிதையைக் கலக்க வேண்டாம்.

“உரைநடையில் கவிதையைக் கலக்கும் போலி கவிஞன் பரிதாபத்துக்கு உரியவன். அவன் மோசமான கவிஞனாகவே இருப்பான். தாந்தேயிலிருந்து எலியட்வரை, எலியட்டிலிருந்து சாங்கினெட்டிவரை நவீனக் கவிஞர்கள் தங்களது நவீனக் கவிதைகளைப் பற்றி எழுத நினைத்தபோதுகூட தெளிவாக, சிக்கலில்லாத உரைநடையில்தான்.  எழுதினார்கள்.”

நான்காவது அறிவுரை: கவிதை எழுத விரும்புகிறவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடாது.

“நீ கவிஞனா? அப்படியென்றால் பல்கலைக்கழகத்தில் போய்ப் படித்து விடாதே.”

ஐந்தாவது அறிவுரை: நீளமான பத்திகளைத் தவிர்க்க வேண்டும்.

“புதிய பத்திகளை அடிக்கடி தொடங்கு. தேவைப்படும்போது மட்டுமல்ல, கதையின் ஓட்டம் அதை அத்தியாவசியமாக்கும்போது மட்டுமல்ல. எவ்வளவுக்கெவ்வளவு புதிய பத்திகளைத் தொடங்குகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது.”

ஆறாவது அறிவுரை: தகுதியுள்ளவர்களிடம் அறிவுரை கேள்.

“நீ எல்லோரிடமிருந்தும் தனித்திருக்கும் அறிவுஜீவி ஆகிவிடாதே.”

எஃகோ வழங்கிய அறிவுரைகளில் எந்தெந்த அறிவுரைகள் பயனுள்ளவை என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எஃகோவை நான் ஆசானாக ஆராதிப்பவன்.

ஆனால் அவருக்கு நான் நல்ல சீடன் அல்ல.

2 thoughts on “உம்பெர்ட்டோ எஃகோ – எழுத்தாளர்களுக்கு அறிவுரை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s