மொழிபெயர்ப்பாளர்கள் நிச்சயம் முன்னுரை எழுத வேண்டும்

திங்கட்கிழமை 30 செப்டம்பர் அனைத்துலக மொழிபெயர்ப்புத் தினம். அன்று மாலை ஒரு ஆங்கில அமர்வில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள்.

நான் மொழிபெயர்ப்பேன் என்பதும் அதற்கும் மேலாக மொழிபெயர்ப்புகளைப் பற்றி ஏதேனும் உருப்படியாகப் பேசுவேன் என்பது அவர்கள் நம்பிக்கை. நிற்க.

இன்று மதியம் மெர்செடீஸ் என்னைப் பார்க்க வந்தாள். வாகனம் அல்ல. என் தோழி. கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவள். சிசாகோவில் இலக்கியப் பட்டப்படிப்பு முடித்த பிறகு கொரியாவுக்குப் போய் ஆறு வருடங்களாக கொரிய மொழி கற்றவள். பிறகு கொரியாவில் தங்கி அவர்கள் கலாச்சாரத்தைப் பற்றித் தனது அறிவை ஆழப்படுத்திச் சமகால கொரிய இலக்கியத்தை மொழிபெயர்த்து வருகிறாள். என் கொரிய மொழிபெயர்ப்புகளுக்குத் தோன்றாத் துணை.

அவளுடன் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.

நான்: ஒரே பாஷையில இருந்து மொழிபெயர்க்குறது போரடிக்கலியா?

அவள்: சீரியஸான மொழிபெயர்ப்பாளரா இருக்கணும்னா ஒரு மொழியில ஆழமான அறிவும், அந்த மொழிக் கலாச்சாரத்தோட நல்ல பரிச்சயமும் ஏற்படணும். அதே சமயம் எந்த மொழியில மொழிபெயர்க்குறோமோ அத மொழியில அந்த இலக்கியத்துல ஆழமான பயிற்சி இருக்கணும். இதுக்கே ஒரு வாழ்நாள் போதாது. இதுல எப்படி நாலஞ்சு மொழியில இருந்து மொழிபெயர்க்குறது.

நான்: ஒரு படி தள்ளி ஒரு பொது மொழியில இருந்து – உதாரணத்துக்கு ஆங்கிலத்துல இருந்து – நிறைய மொழிபெயர்க்கலாம் இல்லையா?

அவள் (சிரிக்கிறாள், அழகான சங்கீதப்பூர்வமான சிரிப்பு): ஆங்கிலத்துல மொழிபெயர்த்தது சரியாத்தான் இருக்குனு எப்படித் தெரியும்? மேலும் ஆங்கிலத்துல ஒரு மொழியோட நுணுக்கங்கள் மொத்தத்தையும் கொண்டு வந்துர முடியாது. ஆகையால் ஆங்கில மொழிபெயர்ப்புப் பாதினா, அதுல இருந்து வேற்று மொழிக்கு மொழிபெயர்ப்பு கால்வாசிதான்.

நான்: அப்படினா வேற வழியே இல்லையா?

அவள்: சிறப்பா மொழிபெயர்க்கணும்னா அந்த மொழியச் சரியாக் கத்துக்கறத தவிர வேற வழியில்லை. இரண்டாம் பட்சமா, சில ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்துச் செய்யலாம். ஒரே ஆங்கில மொழிபெயர்ப்புத்தான் உண்டுனா, பகவான் மேல பாரத்தைப் போடுறதவிட வேற வழியில்லை (அவள் இதை அப்படியே சொல்லவில்லை. அவள் சொன்னதின் சாராம்சம்). இந்த நிலையில ஆங்கிலத்துல இருந்து மொழிபெயர்ப்புனு கொண்டுவரத விட அந்தக் கதைய சொந்த மொழியில சொல்லிப் புத்தகமாக்கலாம்.

நான்: abridged version மாதிரி.

அவள்: abridged version மாதிரி.

நான்: அப்புறம்?

அவள்: அப்புறம் மொழிபெயர்ப்பாளர்கள் நிச்சயம் நல்ல இலக்கிய விமர்சகர்களா இருக்கணும். படைப்பாளிகளவிட நிறைய வாசிக்கணும். இல்லைனா தரமில்லாத படைப்புக்கள மொழிபெயர்த்து இதுதான் உச்சம்னு சாதிக்கிற வாய்ப்பிருக்கு.

நான்: இதுக்கும் நீயே எதாவது அறிவுரை வச்சிருப்பியே.

அவள்: உண்டு. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தான் மொழிபெயர்க்குற புத்தகத்துக்கோ, சிறுகதைக்கோ, கவிதைக்கோகூட ஒரு முன்னுரை குறிப்பு எழுதறது கட்டாயமாகணும். ஏன் இந்தப் படைப்பு மொழிபெயர்க்கத் தகுந்ததுனு. அப்படி முன்னுரை இல்லாம மொழிபெயர்ப்புகள் வரக்கூடாது.

நான்: இது உனக்கே கடுமையா இல்லையா?

அவள்: இல்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசகர்களிடையே அங்கீகாரம் கிடைக்கிறதுக்கு இது ஒரு வழி. சும்மா அங்கீகாரம் இல்லையேனு அழறதுல அர்த்தம் இல்ல.

One thought on “மொழிபெயர்ப்பாளர்கள் நிச்சயம் முன்னுரை எழுத வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s